அமெரிக்கா பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருக்கு டிச. 29-ந் தேதி குழந்தை பிறந்தது.போலீசார், மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அங்கு ஆண் நர்ஸாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் குற்றவாளி என்பது தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

