பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர், 23 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க உள்ளார்.
இவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘என் தாய்க்கு 23 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆனது, வரும் வெள்ளிக்கிழமை அவருக்கு மறுமணம் நடக்கவுள்ளது.
நான் பெரியவனாகி விட்டேன், என் நிதி நிலைமையும் நன்றாக உள்ளது. உங்கள் பிரார்த்தனையில் என் தாயையும் நினைத்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் இளைஞரின் இந்த பதிவுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

