பாகிஸ்தானில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சீக்கியருக்கு அபராதம் விதித்ததற்காக சீக்கிய அமைப்பிடம் அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரி உள்ளது.
பெஷாவர் நகரில் சீக்கிய இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். போக்குவரத்து போலீஸ்காரர் அவருக்கு அபராதம் விதித்தார்.
இது, சீக்கியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதற்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

