கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
அதேப்போல் 50,000 குடிசை வீடுகள் காணப்படுகின்றன. எனவே 2014ஆம் ஆண்டளவில் இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

