Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா தொடர்ந்தும் இழுபறியில்

January 23, 2019
in News, Politics, World
0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றும் இணக்கமின்றி நிறைவடைந்தது.

கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர தலைமையில் நேற்று (22) பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்படி இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்ததால் இப் பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை.

இதுவரை காலமும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சருக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது. தற்போது சிலர் ”கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் மாத்திரம்தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது.

அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொறுப்பு” என்று சொல்லித் தப்பித்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டுத் தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். இராமநாதன் உட்பட முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டத்தரணி கா. மாரிமுத்து, எம். ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொதுச் செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டுத் தொழிற்சங்கங்களின் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

எதிர்க்கட்சி தலைவர் தன் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்

Next Post

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி

Next Post

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures