கனேடிய தபால் திணைக்களம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தபால் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் மிக அதிகளவில் வாகனங்களைக் கொண்டுள்ள திணைக்களங்களில் ஒன்றான தபால் திணைக்களத்தின், வாகனங்கள் இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் விநியோகம் செய்வதற்காக சுமார் ஆறாயிரம் வாகனங்களைக் கொண்டுள்ள தபால் திணைக்களத்தின் வாகனங்கள் தற்பொழுது எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
இந்த வாகனங்களில் எரிவாயுவிற்கு பதிலாக இலத்திரனியல் அடிப்படையிலான எரிசக்தியைக் கொண்டு இயங்கும் வாகனங்களாக உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு மாற்றினால் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தபால் ஊழியர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

