ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் (வெள்ளிக்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்பாக தகவல் வெளியிடாத சிறப்புப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

