டயகம மேற்கு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகளைக் கொண்ட ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா ஏழு பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளன.

