ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பலமான கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரதமர், ஜனாதிபதி என இருவரையும் தெளிவாக அடையாளப்படுத்த அக்கூட்டணிக்கு முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து ஊடகங்களிடம் நேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

