மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறாத அரசியலமைப்பொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க வேண்டாம் என பௌத்த சாசனத்திற்கான பணிக்குழு சபை விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
சபையின் தலைவர் திவியாகஹ யஸஸ்ஸி தேரர் உட்பட முக்கிய தேரர்கள் பலர் இந்த அறிவித்தலில் கையொப்பம் இட்டுள்ளனர்.
அவ்வாறு புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வர வேண்டுமாயின், மகா சங்கத்தினரின் பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பு சபையொன்றிடம் அந்தப் பணியை ஒப்படைக்குமாறும் அச்சபை கோரியுள்ளது.

