மாகாணசபை தேர்தரலை புதிய முறையில் நடத்துவது சாத்திமயற்றதாக காணப்படுமாயின் பழைய தேர்தல் முறையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுல் இணைத்து கொள்ள வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவ்வமைப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கின்றது.
இந்த புதிய அரசியலமைப்பு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
முதலில் அரசாங்கம் முறையாக இடம் பெற வேண்டிய தேர்தல்களை நடத்த வேண்டும் . அதன் பின்னரே ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

