முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியும் உற்ற நண்பர்கள் எனவும் அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் எனவும் மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வருவதாயின் நாம் எமது இரு கரங்களையும் உயர்த்தி விருப்பம் தெரிவிப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரம் நெருங்கும் போது பொருத்தமான தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் ரோஹித எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ வருமா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவாரா? என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.