வத்தளை – ஹேக்கித்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காரில் வந்த சிலர், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றுமொரு காரில் பயணித்து கொண்டிருந்த போது, அவர்கள் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.