நேற்று சனிக்கிழமை காலை பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சம்பவத்துக்குள் சிக்குண்ட நபர் ஒருவரை காணவில்லை என இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை rue de Treviso வீதியில் 30 தீயணைப்பு படையினர் குவிந்துள்ளனர். எரிவாயு கசிவினால் வெடிப்பு ஏற்பட்டிருந்த போதும், கட்டிடம் முன்னதாகவே மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அதனாலேயே இந்த வத்து இவ்வளவு பூதாகரமாக சிதறியுள்ளது எனவும், கட்டிடத்தின் உறுதிப்பாடு குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணிகள் அடுத்த 24 மணிநேரத்துக்கு நீடிக்கும் எனவும், இடம்பெயர்த்தப்பட்டோருக்கு ஒன்பதாம் வட்டார நகர முதல்வர் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துக்கொடுத்துள்ளார். காணாமல் போயுள்ள நபரை தேடும் பணி துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.