அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய ரூபாய் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.84 ரூபாயாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புதிய முறி மூலம் 98 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்ட முடிந்ததாகவும் அதன் மூலம் டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த சில காலமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.