செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயாராகி உள்ளதாக அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க் தமது டுவிட்டர் பக்கத்தில், புதிய ராக்கெட்டின் படத்தை வெளியிட்டுள்ளார்.
செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்கள் கொண்டு சென்று மீண்டும் பூமிக்கே திரும்பும் வகையில் ஸ்டார்ஷிப் என்ற அந்த விண்வெளி ஓடம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக எலன் மஸ்க் கூறியுள்ளார்.
விண்வெளி ஓடத்தின் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், இது அசல் புகைப்படம் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும், விண்வெளிப் பயணத்துக்கான ராக்கெட்டையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதித்துப் பார்க்கவுள்ளது.