அமெரிக்க பார்லி.உறுப்பினராக உள்ள துளசி கப்பார்ட் . 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
அமெரிக்க பார்லி.யில் ஜனநாயக கட்சியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட், இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
நேற்று சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவேன். இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.