நிலவின் மறு பக்கத்தில் இறங்கி உள்ள சீனாவின் விண்கலம் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.சீனாவின் ‘சேஞ்ச் -4’ விண்கலத்தில் இருந்து யாடு -2 ‘என்ற ஆய்வு வாகனமும் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சேஞ்ச் -4 தனியாகவும், யாடு -2 தனியாகவும் ஆய்வை மேற்கொண்டன. இரு எந்திரங்களும், நிலவின் மறுபக்கத்தையும், அங்குள்ள 13000 மீட்டர் ஆழமுள்ள பெருங்குழியையும் படமெடுத்து அனுப்பின. அங்கிருந்து மண்ணையும் அவை சேகரிக்க உள்ளன. தொடர்ந்து இயங்கியதால் உருவான வெப்பத்தை அடுத்து யாடு-2 தன் இயக்கத்தை நிறுத்தி ஓய்வுக்கு சென்றுள்ளது.