மாத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த காணொளி வெளியாகியுள்ளது.
மாத்தளை நகர மத்தியில் இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளைக் கோட்டில் வீதியை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இந்த பெண் மீது மோதியுள்ளது.
இதனால் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது.