பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் ஆண்டின் முதல் நாளே இடம்பெற்ற துப்பாக்கி சூட்ட சம்பவத்தில் கைதான இருவர் மீதும், தற்போது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
14000 பிளொக் 115 ஏ அவனியு பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 30 வயதான கிறிஸ்டோபர் பவுச்சர் என்பவரும், ஜெமி டிம்ப் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், அவர்கள் மீது ஏழு புதிய கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், இச் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது குழு மோதலாக இருக்ககூடுமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.