Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு பாதகம்

January 4, 2019
in News, Politics, World
0

புதிய அரசியலமைப்பை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு பாதகமாக அமையுமென சு.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பி கூறியுள்ளதன்படி பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படுமாயின் அதனை சுதந்திரக் கட்சி தோற்கடிப்பது உறுதியென்றும் அவர் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயாசிறி எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.”இச்சந்தர்ப்பத்தில் நாம் சுமந்திரன் எம்.பியை தமிழ் மக்களிலிருந்து வேறு பிரித்தே பார்க்க வேண்டியுள்ளது. அவர் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றார். தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகார பகிர்வையும் அவர் இல்லாமல் செய்ய பார்க்கின்றார்.

தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களை பாதுகாக்க நாம் தயார் என்கின்றபோதும் சுமந்திரனின் அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாரில்லை,” என்றும் தயாசிறி எம்.பி விளக்கமளித்தார்.

பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். இது மிகவும் பிழையானதொரு நடைமுறை. புதிய அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்கும் பொறுப்பு மட்டுமே சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர அவரால் தான் நினைத்தவாறு அதனை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. புதிய அரசியலமைப்புக்கான வரைபு அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவிடம் முன்வைக்கப்பட வேண்டும். அக்குழு முன்வைக்கும் அறிக்கையை பிரதமரே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்நடைமுறையை மீறி வரும் எந்தவொரு புதிய அரசியலமைப்பையும் சுதந்திரக் கட்சி தோற்கடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பியால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

கூட்டமைப்பு இப்புதிய அரசியலமைப்பை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறினார்.

அதன் காரணமாகவே ஐ.தே.க இதுவரை அது தொடர்பில் எவ்வித மறுப்பையும் வெளியிடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

” முறைகேடாக கொண்டு வரும் புதிய அரசியலமைப்பை சுதந்திரக் கட்சி எப்படியும் தோற்கடிக்கும் என்பது கூட்டமைப்புக்கும் ஐ.தே.கவுக்கும் நன்கு தெரியும். அவ்வாறு இடம்பெற்றதும் அடிப்படைவாதிகளாக எம்மை தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டி தமிழர்களின் வாக்குகளை தம்பக்கம் சுவீகரிப்பதே அவர்களின் பிரதான திட்டம். ஆனால் சுதந்திரக் கட்சியில் அடிப்படைவாதம் இல்லை என்பதையும் சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் கபட நாடகமே இது என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், ” என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்குவது சுமந்திரன் எம்.பியினதும் ஜயம்பதி எம்.பியினதும் வீட்டு வேலையல்ல. இது நாட்டின் பிரச்சினை.

புதிய அரசியலமைப்பை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை இத்தனை அவசரமாக செய்ய முடியாது.

அனைத்தும் சரியான முறைப்படி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்,” என்றும் கூறினார்.

Previous Post

மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மீண்டும் அதிகாரிகளுக்கு பணிப்பு

Next Post

போராட்டம் நடத்தப் போவதுமில்லை; நீதிமன்றத்தை நாடவும் மாட்டோம்

Next Post

போராட்டம் நடத்தப் போவதுமில்லை; நீதிமன்றத்தை நாடவும் மாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

June 16, 2026
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures