மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் எதிர்க் கட்சிக் காரியாலயத்துக்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியைக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இப்பிரேரணையை ஒப்படைப்பதற்கும் நேற்றைய (02) அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.













