Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக ஊடகங்களில் வதந்தி – தடுக்க சட்டம்

December 26, 2018
in News, Politics, World
0

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்தங்களின்படி போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்கப்பட வேண்டும். அதுபோன்ற செய்திகள் 24 மணிநேரத்தில் நீக்க பேஸ்புக், வட்ஸ்அப் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூகவலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் ஆகியவற்றில் அவ்வப்போது பரப்பிவிடப்படும் வதந்திகள், போலிச் செய்திகளால் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் சிலர் அடித்து வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புவதைத் தடுக்க வட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட மத்திய அரசு, பல்வேறு திருத்தங்களை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கொண்டுவந்துள்ளது. அந்தத் திருத்தங்கள் தற்போது மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சின் இணையதளத்தில் மக்களின் கருத்துக்களை அறிய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு.

போலிச் செய்திகள், வதந்திகளை யாரேனும் பரப்பினால் அந்த வதந்தியை பரப்பிய உண்மையான நபரை கண்டுபிடிக்க வேண்டியது வட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் கடமையாகும்.
நாட்டின் இறையாண்மையின் நலன், நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, அன்னிய நாடுகளுடன் நட்புறவு, பொது அமைதி, நாகரீகம் உள்ளிட்டவை கருதி அந்த வதந்தி செய்தியை அடுத்த 24 மணிநேரத்துக்குள் நீக்கிவிடுவது அவசியம்.

அந்த வதந்திச் செய்தியை விசாரணைக்காக 90 நாட்கள் வரை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று பேஸ்புக், வட்ஸ்அப் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந் நிலையில் அந்த ஆதாரங்களைப் பாதுகாக்கும் நாட்கள் 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

வதந்திகள், போலிச் செய்திகள் தொடர்பாக எந்தவிதமான விவரங்களையும் விசாரணைக்காகவோ அல்லது தடுப்பதற்காகவோ சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்காகவோ அரசு விசாரணை முகமைகள் கேட்டால் அதை 72 மணிநேரத்துக்குள் சமூக ஊடகங்கள் வழங்க வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் புதிய சவால்களை பொலிஸாருக்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பும் அதிகாரிகளுக்கும் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் புதிதாக உருவாகுதல், மோசமான காட்சிகளை பரப்புதல், நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் செய்திகளை பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் போன்றவை அதிகரித்து வருகின்றன. ஆதலால் கடந்த 2011ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல்தொழில்நுட்பச் சட்டங்கள் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்கள் குறித்து பல்வேறு அமைச்சுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின் சமூக ஊடகங்களான பேஸ்புக், வட்ஸ்அப், கூகுள், ட்விட்டர், யாகூ, மற்றும் ஐஏஎமஏஐ, சிஓஏஐ, ஐஎஸ்பிஏஐ போன்ற அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் திகதிக்குள் இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்க சமூக ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Previous Post

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது

Next Post

மூடுபனியால் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து

Next Post

மூடுபனியால் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures