Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பான் உணவகம் ஒன்றில் மர்மபொருள் வெடித்து விபத்து : 42 பேர் படுகாயம்

December 17, 2018
in News, Politics, World
0

ஜப்பான் நாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Hokkaido என்ற தீவு பகுதியின் Hiragishi மாவட்டத்தில் உள்ள Sapporo உணவு விடுதியில் வெடி பொருள் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உணவருந்தி கொண்டிருந்தவர்களும் ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர்.

மர்ம பொருள் வெடித்ததில் உணவகம் தீ பற்றி உருக்குலைந்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.இதில் இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

வெடித்த பொருள் மற்றும் அதன் தன்மை குறித்தும், வெடிப்பொருளை வெடிக்கச் செய்தது பயங்கரவாத குமபலா என்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

Previous Post

வடகொரியாவின் திடீர் மிரட்டலால் அமெரிக்கா அதிர்ச்சி

Next Post

சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரலால் பதற்றம்!

Next Post

சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரலால் பதற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures