ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் நான்கு பேர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (16) கலை சரியாக 11.16 மணிக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

