Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி – மஹிந்த காலையும் வாரிய வியாழேந்திரன்!

December 16, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் கட்சி தாவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர்.
எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மைத்திரி- மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை அடுத்து, இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், முன்னதாக கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும் , கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரனும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
இவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரி- மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

மக்களுக்கான இறுதி எச்சரிக்கை

Next Post

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் மஹிந்த குழு பங்கேற்பு

Next Post

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் மஹிந்த குழு பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures