ஐக்கிய தேசியக் கட்சி காலி முகதிடலில் நீதி வழங்குவதற்கான போராட்டத்தை திங்களன்று (டிசம்பர் 17) நடத்துவதற்கு அனைவரையும் அழைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (15) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியும் (UNF) மற்றும் தொழிற்சங்கங்களும் உட்பட தேசிய அமைப்புக்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வதாக கரியவசம் தெரிவித்தார்.

