இஸ்ரேல் வீரரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை இஸ்ரேல் ராணுவத்தினர் வெடி குண்டு வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக மேற்குக்கரை பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை இஸ்ரேல் போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், மேற்குக்கரை பகுதியின் தெற்கே அல்-பைரே என்னுமிடத்தில் உள்ள அம்அரிஅகதிகள் குடியிருப்பை வெள்ளிஇரவு ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து சுமார் 400 பேரை கைது செய்தனர்.
மேலும், அப்பகுதியில் அபு ஹமித் குடும்பத்துக்கு சொந்த மான 4 மாடிகள் கொண்ட வீட்டை வெடி வைத்து, தகர்த்து தரை மட்டமாக்கினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் தற்போது பாலஸ்தீன செம்பிறை தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இப்பகுதிக்கு வந்த ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது பாலஸ்தீனியர்களுக்கும் ராணு வத்துக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு பத்திரிகையாளர் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

