உத்தரப் பிரதேசம் சகரன்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜூலியை அதே இடத்தில் வசிக்கின்ற திபு என்ற இளைஞன் ஒருதலைப் பட்சமாகக் காதலித்து வந்துள்ளார்.
மாணவி பாடசாலை சென்று வீடு செல்லும்போது மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த போது தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தொடர்ந்து 4 முறை சுட்டுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த பெண்ணை எவரும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவில்லை.மாறாக சுற்றி நின்று செல்போனில் படம் பிடிப்பவர்களும், பெண்ணிடம் மாறி மாறி கதை கேட்பவர்களுமாகவே நின்றிருந்தனர்.
சுய நினைவுடன் இருந்த பெண்ணை நினைவிழந்த பின்னரே காவல்த்துறையினர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.துப்பாக்கியால் சுட்ட இளைஞனை பொலீசார் தேடி வருகின்றனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவியை கேள்வி மேல் கேள்வி கேட்டு சுய நிவைவில்லாமல் ஆக்கும் கானொளியை நீங்களே பாருங்கள் மக்களே என்ன ஒரு சமூகம்.
https://www.youtube.com/watch?time_continue=34&v=rF9DtR53F1c

