ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான பிரிட்டன் தூதரகத்தின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும்ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் பொப் லாஸ்ட் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு, திருகோணமலையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கட்சிப் பிரதிநிதகளால் எடுத்துக் கூறப்பட்டன என்று கட்சி யின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

