நாட்டிலுள்ள சகல க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும் நாளைய இன்று விசேட பொலிஸ் நடமாடும் சேவையை நடாத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்பரீட்சையின் இறுதி நாளான இன்று தினம் மாணவர்கள் குழுக்கிடையில் ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுமாறும், பிரச்சினைகள் ஏற்படும் வகையில் செயற்பட்டால், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

