2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில் பெறுப்பதிகாரியாக கமையாற்றியிருந்த நிலையில், வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பொறுப்பதிகாரி இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

