நாடு நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு அரசியல் அமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என தேசிய ஒழுங்கமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு விரைவான தீர்வு ஒன்று காணப்படவேண்டும்.
அவ்வாறு தீர்வு காணப்படுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்ற சந்தர்ப்பத்தில், அதனை மக்களிடம் கொண்டு சென்று தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான, அதிகாரம் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

