ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு செவிசாய்க்காது போனால், நீதிமன்றம் வெளியிடும் தீர்மானத்துக்கும் கட்டுப்படாது போனால் அடுத்து விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.
உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரும் வரையில் எதிர்பார்த்துள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக போராட்டம் முன்னெடுத்த உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அவ்வாறான ஒரு நடவடிக்கையையே நாம் பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

