பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு காணப்படுகின்றது என தெரிவித்து பிரேரணையொன்று பாராளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உட்பட எட்டுப் பேருடைய கையொப்பத்துடன் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இப்பிரேரணை எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதம் நடாத்தி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.யின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.முன்னணியின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்றது எனத் தெரிவித்துள்ள நிலையில் இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஐ.தே.முன்னணி எதிர்பார்க்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக தகுதியானவர் என ஜனாதிபதிக்கு மீண்டும் பாராளுமன்றத்தின் கருத்தையும் உறுதியாக அறிவிப்பதன் மூலம், ஜனாதிபதிக்கு அழுத்தத்தைக் கொடுப்பது இப்பிரேரணையின் மறைமுக நோக்கமாக இருக்கலாம் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
225 பேரின் ஒப்பத்துடன் வந்தாலும் ரணிலை நான் நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

