நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கிடைப்பதற்கும், ஞானசார தேரருக்கு விடுதலை கிடைப்பதற்கும் வேண்டி பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளது.
இப்பூஜை வழிபாடானது நேற்று (06) சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் கூடிய தேரர்கள், பின்னர், ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்து இவ்வழிபாடு இடம்பெற்றுள்ளது.

