ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தவுடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத் சட்டத்தை மாற்றியமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இத்தனை நெருக்கடி நிலைமைக்கும் காரணம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமே ஆகும்.
நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்ததற்கான காரணம், ஆணைக்குழுக்களை நியமித்து மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தை நிலைநாட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆகும். இன்று மக்களுக்கு ஜனநாயகம் இல்லாமல் போயுள்ளது. வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. இந்த 19 இன் மூலமாகவே இவ்வளவும் நடைபெறுகின்றது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு தேர்தலை நடாத்தும் அதிகாரத்தை நீதிமன்றம் வழங்காவிடின் ஜனாதிபதி சிறைக்கைதியாக மாறும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

