தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிளி/கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை புதுப்பொலிவு பெற்றுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரது 1.5 மில்லியன் ரூபாய் செலவில் பாடசாலைக்கு சுற்றுமதில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் திரு.தலைமையில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழா மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று காலை பத்து மணியளவில் பாடசாலை முன்றலில் ஆரம்பித்தது.
இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரமேஷ்,வீரவாகுதேவர்,கோகுல்ராஜ் மற்றும் கிராம அலுவலர், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்கள் கிராம மக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் கிளாளி கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பிரதான வீதி பிரச்னைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபார்சில் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்தது இடம்பெற்று வருவதுடன் கிளாலி ஐயனார் கோவில் வீதி மற்றும் முன்பள்ளி வீதி என்பனவும் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.