அரசியல் கட்சிகள் நாட்டின் அரசியல் திட்டங்களுக்கு ஏற்றவாரே செயற்பட வேண்டுமே தவிர கட்சிகளின் தேவைக்களுக்கேற்ப சட்டங்களை மாற்ற முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிகாலத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் சட்டத் திட்டங்களுக்கு முரணான வகையிலும் செயற்பாடுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போது கட்சிகளின் தேவைகளுக்காக இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த அரசியல் திட்டங்களை மாற்றியமைக்கும் செயற்பாட்டை இப்போதுள்ள அரசாங்கம் மேற்கொள்ள முனைவதாக ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.