Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்ணீரில் மூழ்கியது பெரியநீலாவணை ! 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

December 2, 2018
in News, Politics, World
0

வவுணதீவு காவலரணில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கணேஸ் தினேஸ்சின் இறுதிக் கிரியைகள் இன்று(02-12-2018) ஞாயிற்றுக்கிழமை பெரியநீலாவணையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்றது.

இதில் கிழக்குமாகாண பொலிஸ்மா அதிபர், கிழக்குமாகாண ஆளுநர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். பெரியநீலாவணையைச் சேர்ந்த கொல்லப்பட்ட பொலிஸ் சாஜன்ட் கணேஸ் தினேஸ் உடலை பொறுப்பெடுத்த பொலிஸார் அவருக்கான பொலிஸ் இராஜமரியாதையுடன் இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று இருபத்தொரு மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமமான பெரியநீலாவணையில் இளம் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பொலிஸ் இராஜமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

வெள்ளிக்கிழமை அதிகாலைவேளையில் மட்டக்களப்பு வவுணதீவிலுள்ள காவலரண் ஒன்றில் கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இதில் கல்முனைப் பிரதேசம் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் தினேஸ், காலியைச்சேர்ந்த பிரசன்னா ஆகியோர் உயிரிழந்திருந்தனர். இதில் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் தினேஸ்(28வயது) தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸதர் உயிரிழந்திருந்தார்.

இவரின் இழப்பினால் பெரியநீலாவணைப் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிரிழந்த தினேஸ் தனது ஆரம்பக்கல்வியை பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர் கல்வியினை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியில் கற்றிருந்தார்.

கடந்த 2012 இல் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டவர் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், மூதூர், உப்புவெளி போன்ற இடங்களில் கடமையாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்க்கு பொலிஸ் கடமையினை மேற்கொண்டு இரு மாதங்களே ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வர்த்தமானியை வெளியிட்டு விட்டு மைத்திரி படும்பாடு

Next Post

ஒதியமலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

Next Post

ஒதியமலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures