ஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
19 பேர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கட்டடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் கட்டடத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உலகிலுள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனமானது, பிரித்தானிய தூதரகத்தை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.