தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் நேற்றுமுன் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புலனாய்வாளர் ஒருவரே இவ்வாறு அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.