வவுனியா கனகராயன்குளத்தில் 13 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை கைப்பற்றபட்டது. கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கப் ரகவாகனத்தை பொலிஸார் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா கடத்திச் செல்ல பயன்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றபட்டது.