தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது குறித்த சட்ட திருத்தம் இரண்டு வருடங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, நேற்று தைவானில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தைவானில் உள்ள நகரங்களில் நேற்று அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் பத்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கலாமா, என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது.
வாக்கெடுப்பு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கக் கூடாது என பெரும்பான்மையினர் வாக்களித்து இருந்தனர். அதன்மூலம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு நடந்த பொது வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டுள்ளது.