Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பின்தங்கிய பகுதிகளில் பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோரபடவுள்ளன

November 25, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மட்டுமே பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோருவதற்கு அமைய விபரங்கள் திரட்டப்பட்டு விசேட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிலவும் இடர்பாடுகள் தொடர்பில் இந்த ஆண்டு மத்திய கல்வி அமைச்சின் செயலாளார் ஹெட்டியாராச்சி கடந்த யூன் மாதம் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் வருகை தந்திருந்தார். இதன்போதே குறித்த விடயம் தொடர்பிலும் மாகாண கல்வி அமைச்சின் சார்பில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய
வடக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதில் பெரும் இடர் கானப்படுகின்றது. அதே நேரம் அப் பகுதியில் பெருமளவு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அல்லது ஆசிரியர்கள் இன்மை காரணமாகவே வேறு இடத்தினை நாடுகின்றனர். இதனால் சில இடங்களில் அயலில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டம் கேள்விக்கு உள்ளாகின்றது.

இவற்றின் அடிப்படையிலும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருப்பதனை உறுதி செய்வதற்காக மாற்றுத் திட்டம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராயப்பட்டது. இவ்வாறு ஆராயப்பட்ட விடயத்தில் கானப்பட்ட தீர்வினையே தற்போது கல்வி அமைச்சின் செயலாளரிடம் போரிக்கையாக முன்வைக்கப்பட்டது.இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு , அனலைதீவு , எழுவைதீவு , நைனாதீவு ஆகிய தீவுகளிற்கும் . வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நெடுங்கேணி , பழம்பாசி , நைனாமடு , குளவிசுட்டான் போன்ற பிரதேச பாடசாலைகள் அதேபோன்று மடுக் கல்வி வலயத்தின் சில பாடசாலைகளும் முல்லைத்தீவின் சில பாடசாலைகளையும் இந்த விசேட திட்டத்தில் உள்வாங்க சிபார்சு செய்யப்படும்.

இத் திட்டத்தின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் , யுவதிகளிடம் மட்டுமே விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின்போது சேவைக்காலம் முழுமையாக அந்தப் பிரதேசங்களில் பணியாற்றச் சம்மதம் தெரிவித்தால் மட்டும் அவர்களிற்கான ஆசிரயர் பயிற்சிக் கலாசாலை பயிற்சியின் பின்னர் ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் ஓர. விசேட திட்டத்தினை சமர்ப்பித்தோம் இதனை கொள்கையளவில் செயலாளரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதேநேரம் உயர்தரத்துடன் விண்ணப்பம் கோருவதற்கும் விசேட ஏற்பாடும் உள்வாங்கப்படுவதனால் அதனை மத்திய கல்வி அமைச்சே மேற்கொள்ள வேண்டும் .

இவற்றின் அடிப்படையில் வலய மட்டத்தில் பின்தங கிய நிலையில் போக்குவரத்மு நெருக்கடி உட்பட ஆசிரியர்களை நியமிப்பதில் நெருக்கடி கானப்படும் பாடசாலைகளின் விபரம் தற்போது திரட்டப்பட்டுள்ளது. அதற்கமைய அப் பாடசாலைகளிற்கு என ஆசிரியர்கள் விசேடமாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இதன் அடிப்படையில் இங்கும் பட்டதாரி ஆசிரியர்கள் எனில் 3 அல்லமு 5 ஆண்டுகளிளில் இடமாற்றத்திற்காக விண்ணப்பித்து நிற்பார்கள் எனவே குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் சேவை புரிவதற்காகவே இவர்களிற்கு விசேட சலுகையாக உயர்தரத்துடன் குறித்த நியமனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம்.

அதற்கமைய இந்த வகையான ஆசிரியர்களை நியமிப்பதனால் பின்தங்கிய பாடசாலைகளிற்கும் ஆசிரிய பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்படுவதோடு உயர்த்தரத்துடன் உள்ள இளையோருக்கும் வேலை வாய்ப்புக் கிட்டும். என்றார்.

Previous Post

மாரி மழையிலும் நீரில்லாத திட்டக்கிணறுகள்

Next Post

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்

Next Post

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures