கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் கரைச்சி பிரதேச செயலகம் இணைந்து 2016ம் ஆண்டு முன்னெடுத்த திட்டக் குணற்றுள் இன்றும் ஒரு துளி நீர் கிடையாது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேச செயலகத்தினால் 2016ம் ஆண்டு வரட்சியை போக்கும் திட்டத்தின் கீழ் அமைத்து வழங்கப்பட்ட கிணறுகளில் இன்றுவரை ஒரு துளி நீர்கூடக் கிடையாது.
2016ம் ஆண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வரட்சி ஏற்பட்ட காலத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக மாவட்டச் செயலகம் பல கிணறுகள் அமைத்து வழங்கியிருந்தது. இதன்போது குறித்த கிணறு பொருத்தம் அற்ற பகுதியில் அமைப்பதாக கூறப்பட்டதனை பிரதேச செயலக ஊழியர்கள் ஏற்கவில்லை.
அதன் பின்னர் 35 அடி கிணறு வெட்டிய நிலையில் தண்ணீரைக் கானாது கட்டு வேலை ஆரம்பிக்க முட்பட்ட சமயம் குறித்த கிணற்றில் நீர் இன்றி கட்டுவதனால் என்ன பயன் எனவும் வினாவப்பட்டது. அதன்போது வரட்சிக் காலம் என்பதனால் நீர் வரவில்லை மாரிகாலத்தில் நீர் வரத்து ஏற்படும் எனக் கூறப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட பொதுக் கிணற்றிற்கு 3 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடக்கில் அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டு அதனால் இரணைமடுக் குளத்தில் 33 அடி நீர் தேங்கியுள்ள சமயத்திலும் குளத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்ட கிணற்றில் ஒரு அடி நீர்ஏனும் இன்றுவரை வராதமை மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக ஊழியர்களின் திட்டமிடலை எடுத்துக் காட்டுவதாக விசணம் தெரிவிக்கப்படுகின்றது.
இரணைமடுச் சந்தியில் இருந்து குளத்தை நோக்கிச் செல்லும் வீதியோரம் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிணற்றில் இன்றுவரை ஒரு துளிநீர்கூட இல்லாதகாரணத்தினால் அப்பகுதியில் இனிமேலும் இக் கிணறு இருப்பது பொருத்தம் அற்றது. என்றே கூறப்படுகின்றமை தொடர்பில் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. ,
குறித்த கிணறு கடந்த காலத்தில் அமைக்கப்பட்டது. இருப்பினும் இக் கிணற்றில் மாற்று வழிகள் மூலம் சீர் ணெய்யப்பட முடியுமா என ஆராய்ந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்