ஒவ்வொரு நாளும் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது எனவும், நாளுக்கு நாள் ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ள செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள எமது தரப்புக்கு 122 பேரின் ஆதரவு உள்ளதாகவும், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர், தாம் அரசாங்கமொன்றை அமைக்கும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அதனைச் சாதிக்க முடியுமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.