மக்களை மடையர்கள் என நினைத்துக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக மக்களை அறிவுறுத்துவதற்கு “மார்ச் 12 இயக்கம்” திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான அரசியல் நிலைமையைப் பயன்படுத்தி தமது சொந்த சுயநலனைக் கருத்தில் கொண்டு கட்சி தாவுபவர்களை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஒரு மாதத்துக்குள் ஐந்து தடவைகள் கட்சி மாறியுள்ளார். அத்துடன், வடிவேல் சுரேஷ் 3 தடவைகள் கட்சி தாவியுள்ளார்.
இதேபோன்று, இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஆசை வைத்து தமக்கு வாக்களித்த மக்களை மறந்தும், ஏமாற்றியும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் உண்மையான உருவத்தை மக்களுக்கு விளக்குவது தமது இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கையாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

