வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைர் ஒருவரை நேற்று மாலை 2 மணியளவில் சிறைசாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியிலிருந்து சிறைச்சாலை வளாகத்தில் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மதகுவைத்தகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்ற 26 வயதுடைய இளைஞனிடமிருந்தே 540 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

