எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் ஆயிரம் மில்லியன் டொலர் கடனை ஒரே தடவையில் செலுத்த வேண்டும் எனவும், அந்த பணத்தை ஒரே தடவையில் செலுத்த முடியாது போனால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட கடனுக்காக இந்த தொகை செலுத்தப்பட வேண்டும் என பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதி நிதியமைச்சருமான ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொகையை செலுத்த முடியாது போனால், கடன் வழங்கும் சகல நிறுவனங்களும் இலங்கையை கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடாக கருதும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆயிரம் மில்லியன் டொலர் கடனை செலுத்தும் வகையில் எந்த திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

